மிட்டாய் கவிதைகள்!

மீண்டும் எமன் எப்படி வருவான்?

July 20, 2013

eman

உணர்வற்றுக் கிடந்த எனக்கு
உயிராய் உனைக் கொடுத்து
ஊக்கம் கொஞ்சம் தந்து, உன்
உயிரை மட்டுமேன் பறித்துவிட்டான்
அந்த இரக்கமில்லா இறைவன்!

கேட்க ஆளில்லை என்ற நினைப்பில்
காண்பதை எல்லாம் அழிப்பானா
அந்தக் காலன்?
என்னருகே இருந்த சுகத்தை அழித்தாய்,
இப்போது
என்னுள்ளே இருப்பவளை என்ன செய்வாய்?
நான் இருக்கும் வரையில்!

நான் இருக்கும் போதே
நீ இறந்ததாய்..
இப்போதோ
நான் இறக்கும் வரையில்
நீ இருப்பாய் என் உயிராக!


எழுத்தாளர்: எம்.ஆர்.கார்த்திக்